சில மூலிகைகள் உங்களுக்கு எந்தவிதமான பக்கவிளைவுகளும் இன்றி, தேமல் பிரச்சனைக்கு தீர்வு அளிக்கின்றன. அவற்றை நீங்கள் கடைகளில் தான் வாங்க வேண்டும் என்பதில்லை. உங்களது வீட்டின் அருகிலேயே இருக்கும் மூலிகைகளை பயன்படுத்தி தேமல் பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.
அருகம்புல்: அருகம்புல் உடல் நலத்திற்கும், இரத்தத்தை சுத்தம் செய்யவும் மிக முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. அருகம்புல், கஸ்தூரிமஞ்சள், மருதோன்றி போன்றவற்றை அம்மியில் வைத்து அரைத்து பூச தேமல் விரைவாக குணமாகும்.
நாயுருவி இலை: நாயுருவி இலை சாறை தடவி வந்தால் தேமல், படை குணமாகும். இந்த நாயுருவி இலையானது எளிதாக கிரமாப்புறங்களில் கிடைக்க கூடியது. அவ்வாறு கிடைக்கவில்லை என்றால், நாட்டுமருந்து கடைகளில் வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.