அற்புத மருத்துவ குணம் நிறைந்த மணத்தக்காளி....!

Webdunia
வயிற்று நோய், வயிறு உப்பசம், வாய்வுத் தொல்லை உடையவர்கள் மணத்தக்காளிக்கீரையை சமைத்து உண்டால் நோய்க் கட்டுப்பாட்டுக்குள் வரும். கீரையுடன் தேங்காய் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் குடல் புண், மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சல் போன்ற பிரச்சனைகள்  நீங்கும்.
மணத்தக்காளி கீரை கல்லீரல் நோயை குணப்படுத்தி ரத்தத்திற்கு தேவையான சிவப்பணுக்களை உருவாக்குகிரது. உடல் சூடு அதிகம்  கொண்டவர்கள் மணத்தக்காளியை சமைத்து சாப்பிட்டால் உடல் சூடு தணிந்து குளிர்ச்சியாக்கும். இந்த கீரையில் பாஸ் பரஸ், அயர்ன்,  கால்சியம் ஏ, சி மற்றும் பி வைட்டமின் தாதுக்கள் போன்றவை அதிக அளவில் உள்ளது.
 
கருப்பையில் கருவலிமை பெறவும், பிரசவத்தை எளிமைப்படுத்தவும் இக்கீரை உதவுகிறது. மணத்தக்காளியின் வேர் மலச்சிக்கலை நீக்கும்   மருந்துகளில் சேர்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இக்கீரையை சாறாக மாற்றி பிடித்த பழ இரசப் பானம் ஒன்றுடன் இந்தக் கீரைச் சாற்றையும் சேர்த்து  அருதினால் வயிற்றுப் பொருமல்,  பெருங்குடல் வீக்கம், வயிற்றுப் புண், வயிற்று வலி, குடல் புண், நாக்குப் புண், மூல வியாதி முதலியவற்றை விரைந்து குணமாக்கும். 
 
இக்கீரையை பச்சையாக மென்றும் சாப்பிட லாம். மேற்கண்ட வயிறு சம்பந்தமான அனைத்துக் கோளாறுகளும் குணமாக  இக்கீரையுடன் பாசிப்  பருப்பு, வெங்காயம் முதலிய சேர்த்து கூட்டாகச் செய்தும் சாப்பிடலாம்.
 
எல்லா வகையான காய்ச்சல்களையும் இக்கீரை தணிக்கும். உலர்ந்த மணத்தக்காளிக் கீரையை தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும்.  உடனே வடிகட்டி, சூட்டுடன் அருந்த வேண்டும். இது உடனே செயல்பட்டு நோயாளியை நன்கு வியர்க்கச் செய்துவிடும். வயிர்வை  வெளியேறுவதால் காய்ச்சலின் தீவிரம் குறையும். காய்ச்சல் குணமாகும்வரை இக்கீரையைச் சமையல் செய்து உண்ண வேண்டும்.  மணத்தக்காளிப் பழமும் விரைந்து இதுபோல் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்