இரத்த குழாய்களில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்குமா கத்தரிக்காய் !!

செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (12:13 IST)
கத்தரிக்காயில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதனால் உடலில் உள்ள செரிமான மண்டலத்தைப் பாதுகாக்கிறது. கத்தரிக்காயில் இரும்பு, கால்சியம் போன்ற தாதுக்கள் அதிக அளவு உள்ளது. கத்தரிக்காயை வறுத்துச் சாப்பிடுவது பயனற்றது, எனவே கத்தரிக்காயை சமைத்து சாப்பிடுவது நல்லது.


கத்தரிக்காய் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துகிறது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது. கத்தரிக்காயில் கலோரிகள் இல்லை. எனவே கொழுப்பு சத்து இதில் இல்லை. அதுமட்டுமின்றி கத்தரிக்காயில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதனால் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது.

கத்தரிக்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வர இரத்தக் குழாய்களில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்புகள் கரைகிறது, இதய தசைகள் நன்கு வலுப்பெறுகிறது மற்றும் இரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலமாக மாரடைப்பு போன்ற அபாயகரமான பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும்.

சிறுநீரக கற்கள் பிரச்சனையால் அவதிப் படுபவர்கள் கத்திரிக்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வர சிறுநீரக கற்கள் கரைந்து வெளியேறிவிடும். அதே போன்று சிறுநீரக எரிச்சல், தொற்று போன்ற பிரச்சனைகளால் அவதி படுபவர்களுக்கு   கத்திரிக்காய் மிகவும் நல்லது.

கத்திரிக்காயில் அதிக பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து உள்ளது. கத்தரிக்காயை அடிக்கடி உணவில்  சேர்த்து கொண்டால் இயற்கையாகவே நுரையீரலில் இருக்கக்கூடிய கெட்ட கிருமிகள்,  தூசிகள் எல்லாமே சளி மூலமாக வெளியேறி நுரையீரலும் சுத்தமாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்