வெண்டைக்காய், ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஆரோக்கிய நன்மைகளை தரும் ஒரு காய்கறி என நிபுணர்கள் கூறுகின்றனர். இது செரிமானம், வளர்சிதை மாற்றம் மற்றும் ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் உதவும்.
வெண்டைக்காய் ரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துகிறது, குறிப்பாக டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஆய்வுகளின்படி, நீரிழிவு நோயாளிகள் 8 வாரங்களுக்கு, 6 மணிநேரத்திற்கு ஒருமுறை 1000 மைக்ரோகிராம் வெண்டைக்காயை உட்கொள்வது சர்க்கரையை குறைக்க உதவும்.
இதில் உள்ள அதிக நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி, எடையைக் குறைப்பதில் உதவுகிறது. வெண்டைக்காய் இதய ஆரோக்கியத்தை பாதுகாத்து, ரத்த அழுத்தத்தைச் சீராகப் பராமரிக்கவும் துணைபுரிகிறது. மேலும் இது வயிற்று புண்களை குணப்படுத்தும் தன்மையையும் கொண்டுள்ளது.
வெண்டைக்காய் நீர் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதோடு, மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளைத் தீர்த்து, உடலின் வலிமையையும் அதிகரிக்கும் என இருதயநோய் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.