சீத்தாப்பழத்தில் உள்ள மருத்துவ பயன்கள் !!

செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (11:56 IST)
சீத்தாப்பழத்தில் நீர்சத்து, மாவுசத்து, புரதம், கொழுப்பு அதிகமாக உள்ளது. மேலும், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, பொட்டாசியம், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன.


சர்க்கரை நோயாளிகளுக்கு சீதாப்பழ இலை அருமருந்து. சீதாப்பழ மரத்தின் வேர் கருச்சிதைவை கட்டுப்படுத்துகிறது.  சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். காசநோய் இருந்தாலும் மட்டுப்படும்.

சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும். இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டு வந்தால் புண்கள் ஆறும். சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா, காசநோய் கட்டுப்படும். நினைவாற்றல் அதிகரிக்கும்.

சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். மலச்சிக்கல் நீங்கும். பிசிஓடி பிரச்சனை உள்ள பெண்களும் சீத்தாப்பழத்தை சாப்பிடலாம். அதிக உடல் எடை கொண்டவர்கள் சீத்தாப்பழத்தை சாப்பிடலாம். சீதாப்பழம் ஜீரண சக்தியை அதிகரிப்பதால் பித்தம், வாந்தி, பேதி, தலைசுற்றல் ஆகியவற்றையும் குணப்படுத்தும். சீத்தாப்பழம் சாப்பிட்டால் எலும்பு உறுதியாகும். பல்லும் உறுதியாகும்.

சீத்தாப்பழம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். உடலில் உள்ள இரத்தத்தை சுத்திகரித்து இரத்த சோகை நோயைப் போக்கும். அதுமட்டுமின்றி உடல் சோர்வைப் போக்கி உடலுக்கு புத்துணர்வைத் தரும். பித்தம் தெளிந்து மனநோய் குணமாக சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்