உடலுக்கு தேவையான நல்ல கொழுப்புச்சத்துக்கள் நிறைந்துள்ள பாதாம் !!

Webdunia
சனி, 18 டிசம்பர் 2021 (14:51 IST)
புரோட்டின், ஃபைபர், கால்சியம், தாமிரம், மெக்னீசியம், வைட்டமின்கள், நல்ல கொழுப்பு உள்ளிட்ட பல சத்துக்கள் பாதாம் பருப்பில் நிரம்பியுள்ளன.

பாதாமை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் தண்ணீரில் ஊறிய பாதாம் பருப்பை சாப்பிட்டால் அது அதிக பலனைத் தரும். இதுவே பாதாம் பருப்பை சாப்பிடுவதற்கான சிறந்த முறையாகும். 
 
வைட்டமின் E கண்களின் ஆரோக்கியத்திற்காகவும் பயன்படுகிறது. எனவே உங்கள் கண்களில் ஆரோக்கியத்தையும், பார்வைத் திறனையும் மேம்படுத்த பாதாம் பயன்படுகிறது.
 
பாதாம் பருப்பில் அதிக அளவில் புரோட்டீன் மற்றும் பைபர் ஆகிய சத்துக்கள் நிரம்பியுள்ளன. இது உங்களுக்கு அதிக பசி உணர்வு ஏற்படுவதை தடுக்கிறது.
 
பாதாம் பருப்பில் 50 சதவீதம் கொழுப்பு நிரம்பியுள்ளது. பாதாமில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்புச் சத்து தான் அதிக அளவில் உள்ளது. தேவையில்லாத கெட்ட கொழுப்பை உடலில் குறைப்பதற்கும் பாதாம் உதவுகிறது. 
 
மெலிந்த உடல் தேகம் உடையவர்கள், உடல் எடையை சற்று அதிகரிக்க பாதாம் சாப்பிடலாம். மேலும் கெட்ட கொழுப்பு குறைவதனால், அதிக உடல் எடை உடையவர்கள் உடல் எடையை குறைப்பதற்கும் பாதாம் சாப்பிடலாம். இது அவர்களுக்கு நிச்சயம் நல்ல பலனை அளிக்கக்கூடியது. உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரித்து கெட்ட கொழுப்பை குறைக்க பாதாம்  மிகவும் உதவுகிறது.
 
உடலில் உணவு செரிமானத்தை சீராக நடைபெற செய்ய பாதாம் பருப்பு உதவுகிறது. எனவே உடலில் சீராக செரிமானம் நடைபெற உணவு சாப்பிட்ட பிறகு பாதாம் சாப்பிடலாம்.
 
மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பாதாம் உதவுகிறது. பாதாம் சாப்பிடுவது புத்தி கூர்மையையும், அறிவுத் திறனையும் அதிகரிக்க செய்யும். எனவே படிக்கும் குழந்தைகளுக்கு பாதாம் சாப்பிட கொடுப்பது நல்லது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்