மருத்துவகுணம் நிறைந்த பூக்களுள் ஒன்று ஆவாரம் பூ !!

Webdunia
திங்கள், 27 டிசம்பர் 2021 (21:44 IST)
ஆவாரம் பூக்களை சிறிதளவு எடுத்து, அதை நன்கு அரைத்து உடல் முழுவதும் பூசி காய்ந்த பின்பு குளித்து வந்தால் உடலில் துர்நாற்றம் நீங்கும். அதோடு சொறி, அரிப்பு போன்றவற்றையும் நீக்கும்.

தாவரங்களின் வேர், இலை, மரப்பட்டை, காய், கனி போன்றவை மருத்துவத்திற்காக பயன்படுகின்றன. சில தாவரங்களின் பூக்கள் மிகுந்த மருத்துவ குணங்கள் கொண்டதாக இருக்கின்றன. “ஆவாரம் பூ” அப்படிபட்ட மருத்துவ குணம் நிறைந்த ஒரு பூ வகை ஆகும்.
 
காய்ந்த ஆவாரம் பூக்களை சிறிதளவு எடுத்து, பசுந்தயிரில் போட்டு அரைத்து முகத்திற்கு பூசி, சிறிது நேரம் கழித்து முகம் கழுவி வந்தால் முகத்தில் இருக்கும் வடுக்கள், எண்ணெய் தன்மை போன்றவை நீங்கும்.
 
நிழலில் உலர்த்தப்பட்ட்ட ஆவாரம் பூக்களை போட்டு, நன்கு கொதிக்க வைத்து, அந்நீரை வடிகட்டி பனங்கற்கண்டை சிறிதளவு சேர்த்தால் ஆவாரம் பூ தேநீர் தயார். இந்த தேநீரை தினமும் நீரிழிவு நோயாளிகள் பருகி வந்தால் நீரிழவு நோய் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.
 
நீரில் ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம்.இது உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போவக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும். நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர் ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்