சமையலில் வேர்க்கடலை எண்ணெய் சேர்ப்பதினால் உண்டாகும் அற்புத பயன்கள் !!

திங்கள், 27 டிசம்பர் 2021 (20:40 IST)
இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைகின்றன. இந்த எண்ணெய்யில் இருக்கும் வைட்டமின் இ சத்து இருதயத்தை சிறப்பாக செயல்பட செய்கிறது.

வைட்டமின் ஈ நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்திருக்க உதவுகிறது. இது பாக்டீரியா மற்றும் வைரஸ்களில் இருந்து உடலைப் பாதுகாக்கிறது. 
 
கடலை எண்ணெய்யில் செய்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் இதயம் சம்பந்தமான நோய்கள் வர வாய்ப்புகள் குறைவு.
 
வயதானவர்கள் கடலை எண்ணெய் பயன்படுத்தி செய்யப்படும் உணவுகளை அதிகம் சாப்பிட்டு வருவதால் அவர்களின் மூளை செல்கள் புத்துணர்ச்சி பெரும். நரம்புகள் பாதிப்பு, ஞாபக மறதி போன்ற குறைபாடுகளும் நீங்கும். முதியோர்களுக்கு ஏற்படும் மனசோர்வு பிரச்சனையையும் குறைப்பதில் கடலை எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது.
 
சிறிதளவு கடலை எண்ணெய்யை எடுத்து வலி ஏற்படும் மூட்டு பகுதிகளில் நன்கு தடவி, சிறிது நேரம் மெதுவாக பிடித்து விட்டால் சிறிது நேரத்திலேயே மூட்டு வலி நீங்கும்.
 
தலைமுடிக்கு ஆரோக்கியத்திற்கும், வலுவிற்கும் அவசியமான ஒரு வைட்டமின் சத்து வைட்டமின் இ. இந்த சத்து உடலில் குறைவதால் தலைமுடி வலுவிழந்து முடிகொட்டும் பிரச்சனை ஏற்படுகிறது. 
 
உணவில் கடலை எண்ணெய் அதிகம் உபயோகிப்பதால் அதில் இருக்கும் வைட்டமின் இ சத்து முடிகொட்டல் பிரச்சனையை போக்கி தலைமுடி ஆரோக்கியமாகவும், நல்ல வளர்ச்சியும் பெற உதவுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்