அடிக்கடி ஏற்படும் தலைசுற்றலால் அவதியா??..இதை உடனே முயற்சி செய்து பாருங்க..

Webdunia
ஞாயிறு, 14 ஜூலை 2019 (11:55 IST)
அடிக்கடி ஏற்படும் தலை சுற்றலைப் போக்குவதற்கு, நம்முடைய தமிழ்மரபுச் சார்ந்த சித்த வைத்தியத்தில் ஒரு அருமையான தீர்வு ஒன்று சொல்லப்பட்டிருக்கிறது.

தற்போது நாம் ஊட்டச்சத்து இல்லாத உணவுப் பழக்கத்தை கடைபிடிப்பதால், நமது ஆரோக்கியத்தின் நிலை அனுதினமும் மேசமாகி கொண்டு வருகிறது. திடமான மற்றும் சத்துள்ள உணவுகளை உட்கொண்டு, திடகாத்திரமாக இருந்த நமது முன்னோர்கள், நோயற்ற வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். ஆனால், தற்போது நாம் நம்முடைய உணவு பண்பாட்டை மறந்து, சக்கை உணவுகளை எடுத்து கொண்டு வருகிறோம். காய்கறிகளும், பழங்களும் கூட ரசாயன முறையில் தான் தற்போது விளைவிக்கப்படுகிறது. இதன் விளைவால், தற்போது சக்கரை நோய், புற்று நோய் உட்பட பல நோய்களுக்குள் அகப்பட்டு கொண்டிருக்கிறோம்.

இதனிடையே நம்முடைய வாழ்க்கை முறை நவீனமயமாக மாறிக்கொண்டு வருவதால் நாம் அன்றாடம் சிறு வகையான உடல் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறோம். முக்கியமாக கணிணி. மற்றும் செல்ஃபோன்களை அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு தலைவலி, தலைசுற்றல் ஆகியவை ஏற்படுகின்றன. இவற்றிற்கு தீர்வாக ரசாயன மாத்திரைகளை உட்கொண்டு மேலும் தன்னுடைய உடலை மோசமான நிலைக்கு கொண்டு செல்கின்றனர். ஆனால் தலைசுற்றல், தலைவலி ஆகிய பிரச்சனைகளுக்கு நம்முடைய மரபுவழி மருத்துவமான சித்த மருத்துவத்தில், ஒரு எளிமையான தீர்வு ஒன்று சொல்லப்பட்டிருக்கிறது.

அதாவது மிளகு, சுக்கு, கொத்துமல்லி, மல்லிச்செடி ஆகியவைகளை சிறிதளவு எடுத்துக்கொண்டு, அம்மியிலோ அல்லது மின் இயந்திரத்திலோ நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கவைக்க வேண்டும். அந்த நீரில் நாம் அரைத்த மிளகு, சுக்கு, கொத்துமல்லி ஆகியவைகளை சேர்த்து நன்றாக கலக்கவேண்டும். அதன்பின்பு ஒரு சிறிதளவு கருப்பட்டியை உடைத்து அதனுள்ளே போட்டு மேலும் ஒரு 10 நிமிடம் கொதிக்கவிட வேண்டும்.

அதன் பின்பு அதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து தினமும் காலை, இரவு என இரு வேளைகள் குடித்து வந்தால் தலை சுற்று அறவே நீங்கிவிடும். இதனை தொடர்ந்து குடித்து வந்தால், சலி தொல்லை, வரட்டு இருமல் ஆகியவைகள் நம் உடலை தொல்லையே செய்யாது. தலைவலி, தலைசுற்று ஆகிய பிரச்சனைகளை அடிக்கடி எதிர்கொள்கிறவர்கள், இதனை முயற்சி செய்து பயன்பெறலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்