நெட்பிளிக்ஸ் போலவே பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்த யூடியூப்.. சேவை நிறுத்தப்படும் என அறிவிப்பு..!

Mahendran

புதன், 3 செப்டம்பர் 2025 (17:03 IST)
பிரபல வீடியோ தளமான யூடியூப், தனது பிரீமியம் ஃபேமிலி (Premium Family) கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த குடும்ப கணக்கில் இருக்கும் உறுப்பினர்கள் அனைவரும் ஒரே முகவரியில் வசிக்கவில்லை என்றால், அவர்களின் பிரீமியம் சேவை 14 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படும் என்று யூடியூப் அறிவித்துள்ளது.
 
ஒரு குடும்ப கணக்கில் உள்ளவர்களின் இருப்பிடத்தை 30 நாட்களுக்கு ஒருமுறை யூடியூப் தானாக சரிபார்க்கும் என்று கூறப்படுகிறது.ஒரு வீட்டில் இல்லாதவர்களுக்கு பாஸ்வேர்டைப் பகிர்வதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யூடியூப் தெரிவித்துள்ளது.
 
இதேபோன்றதொரு கட்டுப்பாட்டை ஏற்கெனவே நெட்ஃப்ளிக்ஸ் போன்ற நிறுவனங்கள் அமல்படுத்தியுள்ளன.யூடியூப் பிரீமியம் சந்தா செலுத்தியவர்களுக்கு விளம்பரங்கள் இல்லாமல் வீடியோக்களை பார்ப்பது, அதிக தரத்தில் ஆஃப்லைன் டவுன்லோட் செய்வது, மற்றும் வீடியோக்களை பின்னணியில் இயங்க செய்வது போன்ற பல வசதிகளை யூடியூப் வழங்கி வருகிறது.
 
இந்த புதிய கட்டுப்பாடு, பிரீமியம் ஃபேமிலி கணக்குகளை பயன்படுத்தும் லட்சக்கணக்கான பயனர்களை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்