ரஷ்ய ராணுவத்தில் இந்திய இளைஞர்களை சேர்க்க வேண்டாம் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டில் ரஷ்யா அண்டை நாடான உக்ரைன் மீது போர் தொடுத்த நிலையில் 3 ஆண்டுகளாக தொடர்ந்து போர் நடந்து வருகிறது. உக்ரைன் நடத்திய பதில் தாக்குதல்களில் ஏராளமான ரஷ்ய வீரர்களும் பலியான நிலையில், வடகொரியாவிலிருந்து வீரர்களை இறக்கி ரஷ்யா போரிட்டு வருகிறது.
இந்நிலையில் ரஷ்யாவிற்கு படிக்கச் சென்ற இந்திய இளைஞர்களுக்கு அதிக சம்பளம், குடியுரிமை தருவதாக சொல்லி ராணுவத்தில் சேர்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரஷ்ய ராணுவத்தில் 100க்கும் மேற்பட்ட இந்திய இளைஞர்கள் தற்போது உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை விடுவித்து திரும்ப அனுப்பும்படியும், இந்தியர்களை ரஷ்ய ராணுவத்தில் சேர்க்க வேண்டாம் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Edit by Prasanth.K