பாகிஸ்தான் ஜிந்தாபாத் என யார் கூறினாலும் அது தவறுதான்.. கொல்லப்பட்ட இளைஞர் குறித்து சித்தராமையா

Siva

வியாழன், 1 மே 2025 (07:38 IST)
கர்நாடக மாநிலத்தில் கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருந்தபோது, ஒரு இளைஞர் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று கூறியதை அடுத்து, அவர் அடித்து கொல்லப்பட்டார்.
 
இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என யார் கூறினாலும் அது தவறுதான் என முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
 
ஆனால் அதே நேரத்தில், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது குறித்து 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், போலீசார் தீவிர விசாரணை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
இது குறித்து சித்தராமையா மேலும் கூறிய போது, ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என கோசம் எழுப்பப்பட்டிருந்தால், அது கண்டிப்பாக தவறுதான். விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை முழுமையாக வந்த பின்னர் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெளிவாகிவிடும். பாகிஸ்தானுக்கு ஆதரவாக யார் பேசினாலும், அது தவறுதான், அது தேச துரோகத்திற்கு சமம்’ எனக் கூறினார்.
 
இந்த நிலையில், இளைஞர் கொலை சம்பவத்தில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் பலரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்