காதலி வீட்டு முன் தூக்கிட்டு தொங்கிய வாலிபர்

Webdunia
சனி, 27 மே 2017 (20:53 IST)
மும்பையில் காதலி வீட்டின் முன் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
குஜராத்தைச் சேர்ந்த கிசான் ராவல்(26) மும்பையின் நெருல் பகுதியில் வசித்து வந்தார். அதே பகுதியில் வசிக்கும் பெண் மீது காதல் ஏற்பட்டு அந்த பெண்ணை வீடு வரை பின்தொடர்ந்துள்ளார். இதைக் கண்ட அப்பகுதியினர் அவரை அங்கிருந்து விரட்டி அடித்துள்ளனர்.
 
மேலும் இதுதொடர்பாக அந்த பெண் நெருல் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று காலை கிசான் அந்த பெண்ணின் வீட்டிற்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதையடுத்து நெருல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்