செல்பி எடுத்த போதை மனிதரை போட்டுத்தள்ளிய யானை

Webdunia
வியாழன், 27 ஜூலை 2017 (23:29 IST)
உலகமெங்கும் வயது வித்தியாசம் இன்றி இன்று பரவியுள்ள ஒரு வியாதி செல்பி. எதை பார்த்தாலும், யாரை பார்த்தாலும் உடனே மொபைலை எடுத்து செல்பிஎடுப்பது இப்போது ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது. மேலும் செல்பி எடுக்கும்போது ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகமாக உள்ளது.



 
 
இந்த நிலையில் பெங்களூர் உயிரியல் பூங்கா ஒன்றில் போதையுடன் இருந்த ஒருவர் யானையுடன் செல்பி எடுக்க முயன்றபோது திடீரென அந்த யானை செல்பி எடுத்தவரை தும்பிக்கையால் சுழற்றி அடித்து காலில் போட்டு நசுக்கி கொன்றது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இதுகுறித்து போலீசார் விசாரணை செய்தபோது கிடைத்த தகவல்: பெங்களூரு ஹிம்மத் நகரை சேர்ந்த அபிலாஷ். இவரும் அவர் நண்பர்கள் மூன்று பேரும் செவ்வாய் மாலை பன்னார்கட்டா உயிரியல் பூங்காக்கு சென்றுள்ளனர். ஆனால் அன்றைய தினம் வார விடுமுறை. அதனால் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
 
இதனால் அவர்கள் மூன்று பேரும் திருட்டுத்தனமாக உள்ளே சென்றுள்ளனர். மது போதையில் இருந்ததாக தெரிகிறது. யானைகளை அடைத்து வைக்கும் இடத்திற்கும் அவர்கள் நுழைந்துள்ளனர். அங்கு சுமார் 20 யானைகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தது.
 
அங்கிருந்த சுந்தர் எனும் 16 வயது யானையுடன் செல்பி எடுக்க முயன்றுள்ளார். ஆனால் ஆத்திரமடைந்த சுந்தர் அபிலாஷை தாக்கியுள்ளது. இதைப்பார்த்த அவரது நண்பர்கள் மூவரும் தப்பி ஓடினர். 
 
அடுத்த கட்டுரையில்