பல ஆண்களுடன் கள்ளக்காதல்: மனைவியை சராமாரியாக குத்திக்கொன்ற கணவர்

Webdunia
வியாழன், 24 நவம்பர் 2016 (14:59 IST)
மனைவி பல ஆண்களுடன் கள்ள தொடர்பு ஏற்பட்டதை அடுத்து, ஆத்திரமடைந்த கணவர் அவரை சராமாரியாக குத்திக் கொன்றுள்ளார்.


 

மேற்குவங்க மாநிலம் உல்காஸ் நகரை அடுத்த விதல்வாடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் கான். இவரது மனைவி ஜமீலா. இவர் பார் ஒன்றில் நடனமாடி வந்துள்ளார். இதனால், ஜமீலாவுக்கு பல ஆண்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இந்த விஷயம் ராஜேஷுக்கு தெரியவந்ததை அடுத்து, பல முறை ஜமீலாவை கண்டித்துள்ளார். ஆனாலும், ஜமீலாவை தொடர்பை கைவிடவில்லை. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகாராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், சம்பவத்தன்று ராஜேஷ் கானுக்கும், ஜமீலாவுக்கும் வாக்குவாதாம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதை அடுத்து  ஆத்திரமடைந்த ராஜேஷ்கான் ஜமீலாவை சராமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்.

இது குறித்து அவரது நண்பர் சபிபுல்லா காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதற்கிடையில் ராஜேஷ் கான் தலைமறைவு ஆகியுள்ளார். பின்னர், அவரது செல்போன் சிக்னலை வைத்து ஹவுராவில் இருந்து அவரது சொந்த ஊருக்கு செல்லும் ராஜேஷ்கானை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்