பொதுவாக இளைஞர்களுக்கு சமூக வலைதளங்களில் கணக்குகள் இருக்கும். இதில் தனது வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆக வேண்டுமென வித்தியாசமாக யோசிப்பார்கள். அதில் சிலவை கிளிக் ஆகி வெற்றி பெறும் சிலவை தோல்வி பெற்று வினையைச் சம்பாதிக்கும்
இந்நிலையில், கர்நாட மாநிலம் பெங்களூரில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் எலக்ட்ரிக் சிட்டி மேம்பாலத்தில் இருந்து 300 கி.மீ வேகத்தில் ஒரு இளைஞர் பைக்கில் சென்றுகொண்டிருந்தார்.
இந்த வீடியோ வைரல் ஆனதால் குறிப்பிட்ட இளைஞரை போலிஸார் கைது செய்தனர். அதாவது தனது உஅமஹா 100 சிசி பைக்கில் இளைஞர் முக்கியமான சாலையில் 300கிமீ வேகத்தில் சென்றதால் பைக்கை பறிமுதல் செய்த போலீசார் அவரைக் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.