இதனால், மோடி மீதான எதிர்ப்பார்ப்பு கட்சியினருக்கும் மக்களுக்கும் அதிக அளவில் இருந்தது. ஆனால், இப்போது இந்த 5 தேர்தல் முடிவுகள் மூலம் அனைத்தையும் இழந்துவிட்டார் மோடி.
பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, வங்கிகளின் வாராக்கடன், பெரிய தொழிலதிபர்களுக்கு வங்கிக்கடன் தள்ளுபடி, ரபேல் ஊழல், பெட்ரோல், டீசலின் கடுமையான விலை உயர்வு, சமையல் எரிவாயுவின் விலை உயர்வுஎன அனைத்தும் மோடியின் இமேஜை டேமேஜ் ஆக்கியது.
ஆம், மோடியை பிரதமர் பதவியில் இருந்து இறக்கி, அந்த இடத்தில் யோகியை வைக்க வேண்டும் என உபி மாநிலத்தை சேர்ந்த இந்துத்துவா அமைப்புகள் களத்தில் குதித்துள்ளன.
மேலும், போஸ்டர்கள், சமூக வலைதங்களில் #Yogi4PM ஹேஸ்டேக் போட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதாவது வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் யோகியை பிரதமராக முன்னிறுத்தும் நோக்கில், அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டு இந்த செயலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இது மோடிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.