ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் அனைத்தும் பாஜக வுக்கு எதிராக வந்துள்ளன. பாஜக ஆட்சி செய்த ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் ஆட்சியை இழந்துள்ளது. மேலும் மிசோரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் குறிப்பிட்டு சொல்லும்படியான வாக்குகளைக் கூடப் பெற வில்லை. இதனால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வீசியதாக கூறப்பட்ட மோடி அலை ஓய்ந்து விட்டதாக அரசியல் வல்லுனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இதனால் இழந்த செல்வாக்கை மீட்க விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யலாம் என யோசித்து வருவதாகவும், இதற்கான அறிககை விரைவில் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 25 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயனடைவார்கள் எனவும் விவசாயிகளின் வாக்குகள் தங்களுக்கு கிடைக்கும் எனவும் பாஜக யோசித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.