வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் அதனைத் தொடர்ந்து இன்று புயலாகவும் வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி, யாஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் இன்று உருவாகி வலுப்பெற்றுள்ளது.
வங்கக் கடலில் உருவாகி, ஒடிசா மற்றும் மேற்குவங்கத்தை நோக்கி நகர்ந்து வரும் யாஸ் புயல் மிகப்பெரிய சேதத்தை விளைவிக்கும் ஆற்றல் கொண்டது என்றும் உம்ப்பன் புயல் மற்றும் டவ்தே புயல் போன்று அதிதீவிரமான ஒன்று என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.