எங்கள் போராட்டம் குறித்து கிரிக்கெட் வீரர்கள் ஏன் வாய் திறக்கவில்லை? மல்யுத்hத வீராங்கனை கேள்வி..!

Webdunia
வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (15:10 IST)
எங்கள் போராட்டம் குறித்து கிரிக்கெட் வீரர்கள் ஏன் வாய் திறக்கவில்லை என போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீராங்கனை கேள்வி எழுப்பி உள்ளார்
 
ஒட்டு மொத்த தேசமும் இன்று கிரிக்கெட்டை வழிபடுகிறது. ஆனால் எங்கள் விவகாரம் குறித்து எந்த கிரிக்கெட் வீரரும் இதுவரை வாய் திறக்கவில்லை. எங்களுக்கு ஆதரவாக எதுவும் பேசவில்லை என்றால் பரவாயில்லை குறைந்தபட்சம் நியாயம் யார் பக்கம் இருக்கிறதோ நடுநிலையாவது ஏதாவது பேசலாம், இது எனக்கு வலியை தருகிறது என்று மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தெரிவித்துள்ளார். 
 
முன்னதாக, பாஜக எம்.பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக் ஆகியோர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினர்.
 
கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தற்போது மீண்டும் தங்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்