குரங்குகள் தொல்லையை சமாளிக்க முதல்வர் கூறிய சூப்பர் ஐடியா

Webdunia
திங்கள், 3 செப்டம்பர் 2018 (08:27 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பல பகுதிகளில் கடந்த சில மாதங்களாக குரங்குகளின் தொல்லை அதிகரித்து வருகிறது. சாலையில் வாகனங்களில் சென்று கொண்டிருப்பவர்கள் மீது திடீரென குரங்கு பாய்வதால் ஒருசில விபத்துகுகளும் ஏற்பட்டுள்ளது. இதுவரை குரங்குகளினால் மட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்ட  விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று மதுராவின் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத் சென்றிருந்தார். அப்போது பொதுமக்கள் குரங்குகளின் தொல்லை குறித்து கூறினர். இதற்கு பதிலளித்த முதல்வர் ஆதித்யநாத், 'ஹனுமானை தினமும் வழிபட்டு வந்தால், அவர் மீதான மந்திரத்தை தினமும் ஓதி வந்தால், குரங்குகள் உங்களுக்கு தொல்லை தராது என்றும், நான் மடாதிபதியாக இருந்தபோது  கோரக்நாத் கோயிலிலும் குரங்குகள் நிறைய வரும். எப்பவுமே அந்த குரங்குகள் என் மடியிலதான் உட்கார்ந்து கொள்ளும். நான் என்ன கொடுத்தாலும் அதை சாப்பிட்டு போய்டும்" என்றும் கூறினார்.

இதுவரை குரங்குகளினால் ஏற்பட்ட விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்கள் பலர் ஹனுமான் பக்தர்கள் தான் என்று பொதுமக்கள்  பொதுமக்களின் சிலர் கூறியதற்கு முதல்வர் யோகி பதிலளிக்காமல் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. குரங்குகள் தொல்லைக்கு அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தாங்கள் கருதியதாகவும், ஆனால் முதல்வர் ஹனுமான் கதையை கூறிவிட்டு சென்றது தங்களுக்கு அதிருப்தி அளித்துள்ளதாகவும் பொதுமக்கள் புலம்பி கொண்டிருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்