இனிமேல் இந்திய கொரோனா என சொல்லக்கூடாது! – புதிய பெயர் சூட்டிய உலக சுகாதார அமைப்பு!

செவ்வாய், 1 ஜூன் 2021 (08:51 IST)
இந்தியாவிலிருந்து பரவிய மாற்றமடைந்த வைரஸை இந்திய கொரோனா வைரஸ் என குறிப்பிடக்கூடாது என கூறியுள்ள உலக சுகாதார அமைப்பு அதற்கு புதிய பெயர் சூட்டியுள்ளது.

உலகம் முழுவது கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில் பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உருமாறிய வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இந்த வைரஸ்களுக்கு அறிவியல் பெயர்கள் இருந்தாலும் பொதுவில் அந்தந்த நாடுகளின் பெயரை குறிப்பிட்டே வைரஸ்களின் பெயர் அழைக்கப்பட்டது. இதற்கு இந்திய அரசு கடும் அதிருப்தி தெரிவித்திருந்தது.

இந்நிலையில் வைரஸை அந்தந்த நாடுகளின் பெயரில் அழைப்பதை தவிர்க்க மாற்றமடைந்த வைரஸ்களுக்கு பெயர் சூட்டியுள்ளது உலக சுகாதார அமைப்பு. அதன்படி இந்தியாவில் முதலில் பரவிய பி1.617.1 எனும் வைரஸிற்கு ”கப்பா வேரியண்ட்” என பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல இந்தியாவில் கண்டறியப்பட்ட மாற்றமடைந்த கொரோனா வைரஸ் பி1.617.2 க்கு “டெல்டா வேரியண்ட்” என பெயரிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்