அடுத்தடுத்து வந்த நிலநடுக்கங்கள்; ஜப்பானில் அதிர்ச்சி!

செவ்வாய், 1 ஜூன் 2021 (08:38 IST)
ஜப்பானில் சில நாட்களில் தொடர்ந்து நிலநடுக்கும் ஏற்பட்டு வரும் நிலையில் நேற்றும் நிலநடுக்கம் ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பான் நாட்டில் ஹோன்சு நகரத்தின் கிழக்கு கடலோர பகுதியில் நேற்று இரவு திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக இந்த நிலநடுக்கும் பதிவாகியுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் இந்த நிலநடுக்கும் 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக கூறியுள்ளது.

நேற்று முன்தினம் தகஹாகி நகரில் இருந்து தென்மேற்கில் 125 கி.மீ தொலைவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இவ்வாறு தொடர்ந்து சில நாட்களாக நிலநடுக்கும் ஏற்பட்டு வருவது ஜப்பானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்