வாட்ஸ் ஆப்பில் பிரசவம்: இது தான் தொழில்நுட்ப வளர்ச்சியோ!!

Webdunia
திங்கள், 10 ஏப்ரல் 2017 (12:00 IST)
ரயிலில் சென்று கொண்டிருக்கும் போது பிரசவ வலி ஏற்பட்ட கர்பிணிக்கு, வாட்ஸ் ஆப் மூலம் மருத்துவர்கள் பிரசவம் பார்த்துள்ளார்.


 
 
அஹமதாபாத்-பூரி எக்ஸ்பிரஸ் ரயிலில் நிறை மாத கர்ப்பிணி ஒருவர் தனது கணவருடன் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. 
 
இதனால், அபாய சங்கிலியை பிடித்து இழுத்து டிக்கெட் பரிசோதகரும், ரயில்வே காவலர்களும் ரயிலில் மருத்துவர்கள் யாரும் பயணம் செய்கிறார்களா என விசாரிக்கத் துவங்கினர்.
 
இந்நிலையில், புனேவில் உள்ள மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வரும் மாணவர் அப்பெண்ணுக்கு உதவ முன் வந்தார்.
 
நிலைமை மோசமடைவதை உணர்ந்து அந்த மாணவன், மருத்துவர்கள் அடங்கிய வாட்ஸ் ஆப் குழுவில் கர்பிணி பெண்ணின் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
 
இதனைத் தொடர்ந்து வாட்ஸ் ஆப் குழுவில் இருந்த மருத்துவர், எப்படி பிரசவம் பார்க்க வேண்டும் என வாட்ஸ் ஆப் மூலமாகவே தெரிவித்துள்ளார். 
 
அப்பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. நாக்பூர் ரயில் நிலையத்தில் தயாராக இருந்த மருத்துவக் குழு முதலுதவி செய்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்