அரசு ஊழியர்கள் போல் தனியார் துறைக்கும் 26 வார பிரசவ விடுமுறை

Webdunia
சனி, 2 ஜூலை 2016 (18:59 IST)
தனியார் உட்பட அனைத்து துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு 26 வாரங்கள் பிரசவ விடுமுறை அளிக்க வகை செய்யும் மசோதா விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


 

 
தற்போது, அரசு துறையில் பணிபுரியும் அரசுத் துறையில் பணியாற்றும் பெண்களுக்கு 26 வாரங்கள் அல்லது ஆறு மாதம் பிரசவ விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தனியாரை பொறுத்தவரையில் பெண்களுக்கு 3 மாதங்கள் மட்டுமே விடுமுறை அளிக்கிறது. சிறிய நிறுவனங்களில் இந்த சலுகையும் வழங்கப்படுவதில்லை.
 
எனவே, தனியார் துறையில் பணி புரியும் பெண்களுக்கும், அரசு துறை போல் பிரசவ விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என மத்திய அரசு விரும்பியது. எனவே இதுகுறித்த புதிய மசோதா வரும் மழைக்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.
 
புதிய பேறுகால சலுகை மசோதா குறித்து அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா செய்தியாளர்களிடம் கூறியபோது “தனியார் துறையில் தற்போது 12 வாரமாக உள்ள பேறுகால விடுமுறையை,  26 வாரங்களாக அதிகரிப்பதற்கான மசோதா, அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டு, மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றுதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் படும். 
 
மேலும், பெண்கள் வீட்டிலிருந்து பணிபுரிய வேண்டும் என்று கட்டாயபப்டுத்த முடியாது. சில அமைப்புகள், துறைகளில் அவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும். ஆனால், இச்சட்டம் அமலாக்கப்பட்ட பிறகு மற்ற அமைப்புகளில் 26 வார பேறுகால விடுப்பு அவர்களுக்குக் கிடைக்கும்” என்று கூறினார்.
அடுத்த கட்டுரையில்