போலீஸ் அதிகாரியின் சட்டையை பிடித்து அராஜகம் செய்த பெண்: தெலுங்கானாவில் பரபரப்பு

Webdunia
சனி, 4 ஏப்ரல் 2020 (08:31 IST)
போலீஸ் அதிகாரியின் சட்டையை பிடித்து அராஜகம் செய்த பெண்
இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அதனை பொதுமக்கள் அனைவரும் சரியாக கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் முதல் அதிகாரிகள் வரை வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் காவல்துறையினர் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அறிவிக்கப்பட்டுள்ளதால் காவல்துறையினர் பொதுமக்களிடம் கடுமையாக நடந்து கொள்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது 
 
காவல்துறையினர் நமது நன்மைக்குதான் கூறுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளாமல் சிலர் காவல்துறையினர் மீது அராஜகமாக வாக்குவாதத்தில் ஈடுபடுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. அந்த மாதிரி நபர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கடுமையாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறி தெலுங்கானாவில் ஒரு பெண் தனது மகனுடன் சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவர்களை மறித்த காவல்துறை அதிகாரி ஒருவர் ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் சென்றதற்காக வழக்கு பதிவு செய்து அபராதம் கட்டும் படி கூறினார் 
 
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண், போலீஸ் அதிகாரியிடம் சில நிமிடங்கள் வாக்குவாதம் செய்தார். ஆனால் அந்த போலீஸ் அதிகாரி அபராதம் கட்டாமல் விடமாட்டேன் என்று கூற இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் போலீஸ் அதிகாரியின் சட்டையை பிடித்து உலுக்கி ஆவேசமாக பேசினார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
 
காவல்துறை அதிகாரி ஒருவரின் சட்டையை பிடித்து பெண் ஒருவர் உலுக்கியுள்ள சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்கள் ஊரடங்கு உத்தரவை மீறுபவரக்ளை சுட்டுக் கொல்லவும் தயங்க மாட்டேன் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்