ஏ.டி.எம்-ல் வரிசையில் நின்ற பெண்ணிற்கு பிரசவம் - அரசு நிதி உதவி

Webdunia
புதன், 28 டிசம்பர் 2016 (11:35 IST)
ஏ.டி.எம்-ல் பணம் எடுப்பதற்காக வரிசையில் நின்ற நிறைமாத கர்ப்பிணி அங்கேயே குழந்தை பெற்ற விவகாரம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் ஜின் ஜாக் எனும் பகுதியில் வசிப்பவர் சர்வேசா தேவி. நிறைமாத கரிப்பிணியான இவர் பணம் எடுப்பதற்காக, அந்த பகுதியிலிருந்த ஏ.டி.எம் மையத்திற்கு சென்றுள்ளார்.  வரிசையில் நின்றிருந்த போது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
 
அங்கிருந்த பெண்கள் உடனே அவரை அருகில் உள்ள மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கே அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதன் பின் தாயும், குழந்தையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த செய்தி உத்தரபிரதேசம் முழுவதும் பரவியது.
 
இதையடுத்து அந்த பெண்ணிற்கு உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் ரூ.2 லட்சம் நிதியுதவி அளிக்க உத்தரவிட்டார்.
அடுத்த கட்டுரையில்