திருவனந்தபுரம் மாவட்ட இந்து ஐக்கிய வேதி அமைப்பின் முன்னாள் மாவட்ட செயலாளர் பத்மகுமார் கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்து 15 நிமிடத்தில் பாஜக கட்சிக்கு திரும்பினார்.
கேரளா மாவட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சி ஆட்சியில் உள்ளது. காங்கிரஸ் எதிர்க்கட்சியாக உள்ளது. திருவனந்தபுரம் மாவட்ட இந்து ஐக்கிய வேதி அமைப்பின் முன்னாள் மாவட்ட செயலாளர் பத்மகுமார்(58) நீண்ட காலமாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் பணியாற்றியவர்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை பத்மகுமார் திடீரென்று கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்தார். பாஜக மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளையும் கூறினார். இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்த 15-வது நிமிடத்தில் பாஜக எம்.எல்.ஏ. ஓ.ராஜகோபாலை தொடர்பு கொண்டு, தன்னை மீண்டும் கட்சியில் இணைத்து கொள்ளுமாறு கேட்டுள்ளார்.