சுடுகாடுகளான கிரானைட் குவாரிகள் & புதைகுழி ... பெங்களூரில் துயரம்!

Webdunia
செவ்வாய், 11 மே 2021 (09:27 IST)
பெங்களூருரில் கிரானைட் குவாரிகள் அடையாளம் காணப்பட்டு அவை கொரோனா இறப்புகளை எரிக்கும் தகன மேடைகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. நேற்றைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 3,66,161 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 2,26,62,575 ஆக உயர்ந்துள்ளது.
 
இந்நிலையில், அதிகரித்து வரும் கொரோனா உயிரிழப்புகள் காரணமாக கொரோனா சடலங்களை எரிக்க இடம் தேடுவதும் மாநில அரசுகளுக்கு சவாலான காரியமால உள்ளது. அந்த வகையில் கர்நாடக மாநிலம் பெங்கலூரில் 7 தகன மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இவை போதுமானதாக இல்லை. 
 
எனவே, பெங்களூரு நகரத்தின் புறநகர் பகுதிகளில் உள்ள கிரானைட் குவாரிகள் அடையாளம் காணப்பட்டு, அவை தற்போது கொரோனா இறப்புகளை எரிக்கும் தகன மேடைகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், மற்றொரு புறநகர் பகுதியான தவரேகேரில் நீண்ட காலமாக பயன்படுத்தப்படாத புதைகுழி அடையாளம் காணப்பட்டு அவையும் தற்போது கொரோனா மரணங்களின் தகன மேடையாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்