விஸ்வரூபம் எடுத்த கொரோனா - ஒரே நாளில் 40,953 பேருக்கு கொரோனா !

சனி, 20 மார்ச் 2021 (10:42 IST)
கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த  சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 30 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்து வருகிறது. ஆனால் நேற்று  40,953 பேருக்கு கொரோனா பாதிப்பு உறூதி செய்யப்பட்டுள்ளது. 
 
ஆம், புதிதாக 40,953 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,15,55,284 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 188 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,59,558 ஆக உயர்ந்துள்ளது. 
 
மேலும் கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 23,653 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,11,07,332 ஆக உயர்ந்துள்ளது. அதோடு, இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,88,394 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என சுகாதாரத்துறை தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்