ஒமிக்ரானால் 3-வது அலை வர வாய்ப்புள்ளதா?

Webdunia
செவ்வாய், 7 டிசம்பர் 2021 (13:33 IST)
ஒமிக்ரான் வைரசால் 3வது அலை பாதிப்பு ஏற்படுமா? என எழுந்த சந்தேகத்திற்கு பதில் கிடைத்துள்ளது. 

 
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் மெல்ல குறைந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவ தொடங்கியுள்ள ஒமிக்ரான் பாதிப்பு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. தென் ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரான் தீவிரமாக பரவத் தொடங்கியுள்ள நிலையில் இந்தியாவில் இதுவரை 23 பாதிப்புகள் உறுதியாகியுள்ளன.
 
அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 10 பேரை இந்த வைரஸ் தாக்கியுள்ளது. ராஜஸ்தானில் 9, கர்நாடகத்தி 2, குஜராத்தில் 1, டெல்லியில் 1 என இந்த வைரஸ் பரவி உள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரசால் 3வது அலை பாதிப்பு ஏற்படுமா? என சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு டாக்டர்கள் கூறியுள்ளதாவது, 
 
ஒமிக்ரான் கொரோனா வைரசால் மக்கள் பீதி அடைய வேண்டாம். இதனால் 3வது அலை வர வாய்ப்பு இல்லை. அறிகுறியற்ற அல்லது லேசான அறிகுறிகள் கொண்டவர்களை உள்ளடக்கிய சோதனை அதிகரிப்பால் பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது. இதுவரை கிடைக்கப்பட்ட மாறுபாடு பற்றிய தகவலின் அடிப்படையில் மக்கள் பீதி அடைய தேவையில்லை என தெரிசிக்கபட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்