சிவகுமார் கைது: பேருந்து எரிப்பு, பள்ளிகள் மூடல்; கர்நாடகாவில் வெடித்தது போராட்டம்

Webdunia
புதன், 4 செப்டம்பர் 2019 (15:23 IST)
பாஜகவின் அடுத்தடுத்த கைது நடவடிக்கைகளால் காங்கிரஸ் செல்வாக்கு சரிந்துள்ளதா என தொண்டர்கள் பதிலளித்துள்ளனர். 
 
காங்கிரஸ் பிரமுகரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். தற்போது சிபிஐ காவலில் உள்ளார். 
 
இவரது கைதுக்கு அரசியல் முன்பகை காரணம் என பாஜகவின் முக்கிய நபர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. ப.சிதம்பரம் கைதுக்கு பின்னர் போரட்டங்களும் நடைபெற்றது. அந்த வகையில் தற்போது கர்நாடகா மாநிலத்தில் வலிமையான காங்கிரஸ் தலைவராக திகழ்ந்து வரும் கே சிவக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். 
குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மூத்த அமைச்சராக இருந்த டிகே சிவக்குமார் 4 நாள்கள் விசாரணைக்கு பின்னர் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
இவரது கைதுக்கு பின்னரும் அரசியல் பகை இப்பதாக இவரது தொண்டர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அமலாக்கத்துறை கைது செய்ததால் அவருக்கு இருக்கும் செல்வாக்கு கர்நாடகா மாநிலத்தில் சரியும் என நினைக்க வேண்டாம். மாறாக அவர் மீது அனுதாபம் கூடும், அவரது தொண்டர்கள் மற்றும் ஒக்கலிகா சமுதாய மக்கள் ஆதரவு தருவார்கள் என்று தெரிவித்துள்ளனர். 

இதற்கு ஏற்ப, சிவகுமாரின் கைது காரணமாக காங்கிரஸ் ஆதரவாளர்கள் பெங்களூரு-மைசூரு நெடுஞ்சாலையைத் முடக்கியும், நான்கு கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்துகள் மீது கல்லெறிந்தும், கலவரத்தில் ஈப்டுப்பட்டுள்ளனர். இதனால் சில மாவட்டங்களின் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்