4 கள்ளக்காதலர்களின் உதவியால் கணவரை கொலை செய்த இளம்பெண்.. கூண்டோடு கைது செய்த போலீஸ்..!

Webdunia
செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (12:11 IST)
நான்கு கள்ளக்காதலர்களின் உதவியால் கணவனை கொலை செய்த இளம் பெண் மற்றும் அவரது கள்ளக்காதலர்களை அதிரடியாக போலீஸ் கைது செய்யப்பட்டுள்ளனர் 
 
உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த சிவா என்பவருக்கும் மாதுரி என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்கள் நன்றாக வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் திடீர் என அதே பகுதியைச் சேர்ந்த 4 நபர்களுடன் மாதுரிக்க்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. 
 
இந்த கள்ளக்காதல் கணவர் சிவாவுக்கு செய்ய வரவே அவர் மனைவியை கண்டித்து நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு வந்துள்ளது. இதனை அடுத்து தனது நான்கு கள்ளக்காதலர்கள் உதவியுடன் தனது கணவனை தீர்த்து கட்ட முடிவு செய்த மாதுரி கணவனுக்கு மதுவிர்ந்து இருந்து கொடுத்து போதை ஏறியதும் அடித்தே கொலை செய்துள்ளனர் 
 
இந்த சம்பவம் குறித்து சிவாவின் சகோதரர் காவல் துறையில் புகார் அளித்த நிலையில் மாதுரி மற்றும் அவரது கள்ளக்காதலர்கள் நான்கு பேரையும் கூண்டோடு கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்