தம்பியுடன் உறவு வைத்து பிள்ளை பெற்றுக்கொடு: கணவனின் கதையை முடித்த மனைவி!

Webdunia
வியாழன், 6 ஏப்ரல் 2017 (15:26 IST)
கடந்த 25-ஆம் தேதி டெல்லியின் தென்கிழக்கு பகுதியான ஜெய்தபூரில் ஒரு வீட்டில் தனது கணவர் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார் என போலீசுக்கு தகவல் வந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.


 
 
அந்த பெண்ணிடம் விசாரித்ததில் அவர், தனது கணவரும் அவரது நண்பர்களும் ஒரு அறையில் தூங்கினார்கள். ஆனால் மறுநாள் பார்க்கும் போது எனது கணவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார் என கூறினார்.
 
ஆனல் இறந்தது அந்த பெண்ணின் கணவர் என்பதால் போலீசாரின் சந்தேகம் அந்த பெண் மீதே திரும்பியது. இதனையடுத்து அவரை கைது செய்து விசாரித்ததில் பல திடுக்கிடும் உண்மைகளை கூறினார்.
 
18 ஆண்டுகளுக்கு முன்னர் இருவருக்கும் திருமணம் ஆனது. தனது தொழிலை பார்த்துக்கொள்ள தனக்கு ஆண் வாரிசு வேண்டும் என அவரது கணவர் கூறிவந்துள்ளார். ஆனால் பலமுறை கருக்கலைப்பு செய்து வந்த அந்த பெண்ணிற்கு பெண் குழந்தை தான் பிறந்தது. அதுவும் 4 வருடத்தில் இறந்துவிட்டது.
 
இதனையடுத்து தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என பிடிவாதம் பிடித்த அவரது கணவர் உனது தம்பியுடன் உடலுறவு கொண்டு எனக்கு பிள்ளை பெற்றுக்கொடு, அதுவும் என் கண் முன்னால் உடலுறவு கொள்ள வேண்டும் என வற்புறுத்தியுள்ளார்.
 
அவ்வாறு செய்யாததால் ஒருகட்டத்தில் நண்பர்களுடன் கூட்டு பலாத்காரம் செய்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி விடுவதாகவும் அவர் மிரட்டியுள்ளார். இதனால் இவருக்கு ஒரு முடிவு கட்ட சம்பவத்தன்று தூக்க மாத்திரை கொடுத்து தனது தம்பியுடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். என அவர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்