டாக்டர் சீட்டு கிடைக்காததால் மனைவியை எரித்துக்கொன்ற கணவன்
செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (15:10 IST)
ஹைதராபாத் பகுதியில் மருத்துவர் படிப்புக்கான சீட்டு கிடைக்கவில்லை என கணவர் தனது மனைவியை கெரோசின் ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகோல் பகுதியைச் சேர்ந்த ஹாரிகா(25) என்ற இளம்பெண் ஒருவர் ஞாயிறுக்கிழமை அன்று மர்மமான முறையில் மரணமடைந்தார். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். ஆனால் ஹாரிகாவின் கணவர் தனது மனைவி தற்கொலை செய்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஹாரிகாவின் தாயார், ருஷி குமார், ஹாரிகாவை கெரோசின் ஊற்றி எரித்து கொலை செய்துவிட்டார் என காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
ஹாரிகாவுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிய நிலையில், அவரது கணவர் ருஷி குமார், ஹாரிகாவை தொடர்ந்து சித்ரவதை செய்து வந்துள்ளார். ஹாரிகா எம்பிபிஎஸ் படிப்புக்கான அட்மிஷன் பெற முடியாத காரணத்தினால் தொடர்ந்து சித்ரவதை செய்துள்ளார்.
இந்த ஆண்டு ஹாரிகாவுக்கு பிடிஎஸ் படிப்பிற்கான சீட்டு கிடைத்தபோதும், எம்பிபிஎஸ் சீட்டு கிடைக்கவில்லை என்று அதற்கு ஈடாக வரதட்சணை பெற்றுத் தருமாறு தொந்தரவு செய்துள்ளார்.
இவ்வாறு ஹாரிகாவின் தாயார் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது இது கொலையாக இருந்தாலும் போஸ்ட் மார்ட்டம் அறிக்கை வெளிவந்த பிறகே சந்தேகம் தீரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.