எந்த ஊர் மொழி இது? தமிழ்ல கூட “ராம் கி பாடி” தானா? வைரலான ராமர் கோவில் வழிகாட்டும் போர்டு!

Prasanth Karthick

வெள்ளி, 12 ஜனவரி 2024 (13:18 IST)
ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 15ல் நடைபெற உள்ள நிலையில் ராமர் கோவிலுக்கு செல்லுவதற்கு அயோத்தியில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டும் பலகை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



அயோத்தியில் 1000 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் ஜனவரி 12ம் தேதி கும்பாபிஷேகம் செய்து திறக்கப்படுகிறது. இதற்காக ஏராளமான அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், தொழிலதிபர்கள் வரவுள்ள நிலையில் அயோத்தியில் பாதுகாப்பு ஏற்பாடுகள், நிகழ்ச்சி ஏற்பாடுகள் களைகட்டி வருகின்றது.

இந்நிலையில் அயோத்தி வருபவர்களுக்கு ராமர் கோவிலுக்கு வழிகாட்டுவதற்காக அப்பகுதியில் 28 மொழிகளில் வழிகாட்டி பலகை வைக்கப்பட்டுள்ளது. அவற்றில் இந்தி, உருது, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி, டோக்ரி என 22 இந்திய மொழிகளிலும், அராபிக், சைனீஸ், ஆங்கிலம், ப்ரெஞ்ச், ரஷ்யன் மற்றும் ஸ்பானிஷ் உள்ளிட்ட 6 வெளிநாட்டு மொழிகளிலும் வழிகாட்டும் பலகை உள்ளது.

ஆனால் அனைத்து மொழிகளிலும் “ராம் கி பாடி” என்ற வார்த்தையே எழுதப்பட்டுள்ளது. தமிழிலும் “ராம் கி பாடி” என்றே எழுதப்பட்டுள்ளது. பல மொழிகளில் எழுதப்பட்டிருந்தாலும் அதன் அர்த்தம் மற்ற மொழி மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் இல்லை என கூறி அந்த பலகையின் படத்தை சமூக வலைதளங்களில் பலர் ஷேர் செய்து வருகின்றனர்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்