இந்தியாவில் தனியாரிடம் கொரோனா தடுப்பூசி அதிக விலைக்கு விற்கப்படுவதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் தீவிரமடைந்துள்ள நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி உள்ள நிலையில் சமீபத்தில் ரஷ்ய தடுப்பூசியான ஸ்புட்னிக்கிற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிகளுக்கு அதிக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் ரூ.600 தொடங்கி ரூ.1500 வரை மாநிலம் தோறும், மருத்துவமனைகள் தோறும் விருப்பப்பட்ட விலையை நிர்ணயிப்பதாக கூறப்படுகிறது.
ஆம், இந்தியாவில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசியின் விலை 6 மடங்கு அதிகரித்து இருப்பதால், உலகிலேயே அதிக விலைக்கு தடுப்பூசி விற்பனை செய்யும் நாடாக இந்தியா மாறியுள்ளது. இதனிடையே தடுப்பூசி அதிக விலைக்கு விற்கப்படுவதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
இது குறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள் கூறுவதாவது, தடுப்பூசிகள் கொள்முதல் மற்றும் சேவை கட்டணத்துடன், ஜிஎஸ்டி வரி மற்றும் போக்குவரத்தின் போது ஏற்படும் சேதாரத்திற்குமான தொகையையும் சேர்ப்பதே, கட்டண உயர்வுக்கு காரணம் என தெரிவிக்கின்றன.