ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரெம்டெசிவிர் தேவை! – முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

திங்கள், 10 மே 2021 (12:47 IST)
தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்தை அதிகரிக்க மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் இரண்டு வார முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ரெம்டெசிவிரை வாங்க மக்கள் பலர் அரசு மருத்துவமனைகளில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்தின் தேவையை சுட்டிக்காட்டி ஒரு நாளைக்கு 20 ஆயிரம் குப்பி ரெம்டெசிவிர் மருந்துகள் கிடைத்தால்தான் தமிழக மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும். எனவே தற்போது நாள் ஒன்றுக்கு 7 ஆயிரம் குப்பிகள் மட்டுமே வழங்கும் நிலையில் அதை 20 ஆயிரமாக உயர்த்தி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்