இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்குகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது .
இதனை அடுத்து மறுநாள் அதாவது பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். ஒவ்வொரு முறை பாராளுமன்றம் கூடும் போதும் எதிர்கட்சிகள் ஏதாவது ஒரு பிரச்சனையை எழுப்பி நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்து வரும் நிலையில் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் என்ன பிரச்சனையை கிளப்பும் என்ற கேள்வி எழுந்துள்ளது.