மூடப் பழக்கங்களைத் தடை செய்து சட்டம் இயற்றுக! முதல்வருக்கு விசிக எம்பி கோரிக்கை..!

Siva

ஞாயிறு, 8 செப்டம்பர் 2024 (15:19 IST)
மூடப் பழக்கங்களை தடை செய்து சட்டம் இயற்றுக என முதல்வர் முக ஸ்டாலினுக்கு விசிக எம்பி ரவிகுமார்  கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

மூடப் பழக்கங்களை தடை செய்து பீகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, அஸ்ஸாம், ராஜஸ்தான், கர்னாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் சட்டம் இயற்றியுள்ளன. தமிழ்நாடு அரசும் அதைப்போல சட்டம் இயற்ற வேண்டும் என மாண்புமிகு முதலமைச்சர்
ஸ்டாலின்  அவர்களை கேட்டுக்கொள்கிறேன். இதை வழி மொழிகிறவர்கள் ரிட்வீட் செய்யுங்கள்

முன்னதாக அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் பேசியது மூடப்பழக்கங்களை மாணவ மாணவிகள் மத்தியில் திணிப்பது போல் உள்ளது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக முற்பிறவியில் செய்த பாவம் காரணமாகத்தான் இந்த பிறவியில் மாற்றுத்திறனாளியாக பிறக்கிறார்கள் என்று அவர் கூறியது சர்ச்சைக்கு உள்ளானது.

இது போன்ற மூடநம்பிக்கைகளை மாணவர்கள் மனதில் விதைப்பது குற்றம் என்று திமுக மற்றும் அதன் ஆதரவு கட்சிகள் தெரிவித்து வரும் நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இது குறித்து கருத்தை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்