செல்பி மோக உயிரிழப்பு இந்தியாவில் தான் அதிகம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

Mahendran

வியாழன், 28 ஆகஸ்ட் 2025 (15:33 IST)
செல்ஃபி மோகத்தால் உலகிலேயே அதிக உயிரிழப்புகள் இந்தியாவில் தான் நிகழ்கின்றன என அமெரிக்காவை சேர்ந்த பார்பர் லா பர்ம் என்ற தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வு அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
2014 மார்ச் மாதம் முதல் 2015 மே மாதம் வரையிலான காலகட்டத்தில், இந்தியாவில் மட்டும் செல்ஃபி எடுக்கும் முயற்சியில் 214 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 57 பே காயம் அடைந்துள்ளனர்.
 
உலக அளவில், செல்ஃபி மரணங்கள் அதிகம் நிகழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கா, ரஷ்யா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, பிரிட்டன், ஸ்பெயின் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் உள்ளன.
 
இந்த ஆய்வு முடிவுகள், இந்திய இளைஞர்கள் செல்ஃபி மோகத்திலிருந்து விடுபட்டு, தங்கள் உயிரை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற அவசியத்தை உணர்த்துகிறது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்