லிவிங் டுகெதர் என்றால் என்ன.? கேரள நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

Senthil Velan
வியாழன், 11 ஜூலை 2024 (22:34 IST)
லிவிங் டுகெதர் உறவில் பங்குதாரர்  என்று மட்டுமே கூற முடியும் என்றும் சட்டப்படி திருமணம் செய்து கொண்டால் மட்டுமே துணையை கணவர் என்று அழைக்க முடியும் என்றும்  கேரள உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
 
கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் இளம்பெண்ணுடன் லிவிங் டுகெதர் உறவில் இருந்துள்ளார். அப்போது அந்த இளம் பெண்ணை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. 
 
இதனையடுத்து இளைஞர், தன்னை குடும்ப வன்முறை செய்ததாக இளம்பெண் புகாரளித்தார். இந்த வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது,  இளைஞர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள குடும்ப வன்முறை வழக்கு தவறானது என நீதிபதிகள் தெரிவித்தனர். லிவிங் டுகெதர் உறவில் பங்குதாரர் (பார்ட்னர்) என்று மட்டுமே கூற முடியும் என்றும் அந்த உறவு திருமணம் அல்ல என்றும் குறிப்பிட்டனர். 

ALSO READ: மீனவர்கள் கைது.! முதல்வர் மீண்டும் மீண்டும் கடிதம்.! செவி சாய்க்காத மத்திய அரசு..!!

சட்டப்படி திருமணம் செய்து கொண்டால் மட்டுமே துணையை கணவர் என்று அழைக்க முடியாது என்றும் பங்குதாரர்களிடம் இருந்து உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ துன்புறுத்தப்பட்டால், அது குடும்ப வன்முறை வரம்பிற்குள் வராது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்