மேற்கு வங்கத்தில் உள்ள சரீங்கா பகுதியில் 4 ஆண்டுகளுக்கு முன்பு 165 கோடி ரூபாய் செலவில் நீர்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. சுற்றுவட்டாரத்தில் உள்ள 20 கிராமங்களுக்கு குடிநீர் விநியோகத்திற்காக 2012ல் கட்டத் தொடங்கிய நீர்த்தேக்கத் தொட்டியின் பணிகள் 2015ல் முடிவடைந்தன. கடந்த 4 வருடங்களாக இந்த நீர்தேக்கத் தொட்டியின் மூலம் 20 கிராமங்களும் பயனடைந்து வந்தன.
சில மாதங்களுக்கு முன்பு நீர்த்தேக்க தொட்டியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து விரிசல் விரிவடைந்து வந்ததால் நீர்த்தேக்க தொட்டியில் நீர் ஏற்றும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று வலுவிழந்த நீர்த்தேக்கத் தொட்டி பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.