#GoBackAmitShah அமித்ஷாவை விரட்டும் மேற்கு வங்க மக்கள்!
செவ்வாய், 1 அக்டோபர் 2019 (20:45 IST)
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மேற்கு வங்கம் வந்ததை எதிர்த்து பலர் சமூக வலைதளங்களில் ஹேஷ்டேகுகளை பகிர்ந்துள்ளனர்.
மேற்கு வங்க தலைநகரான கொல்கத்தாவிற்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்ற அமித்ஷா காந்தி இந்து-இஸ்லாம் மக்கள் இடையே பிரிவினையை ஏற்படுத்தியதாக பேசினார் என கூறப்படுகிறது.
திரிணாமூல் காங்கிரஸ் வந்தேறிகளை உள்ளே நுழைய அனுமதித்து விட்டதாகவும், தேசிய அளவிலான கணக்கெடுப்புகள் மூலம் உண்மையான குடிமக்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்கப்படும் எனவும் அவர் பேசியுள்ளார்.
அவரது இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் மற்றும் மக்கள் கோ பேக் அமித்ஷா என்ற ஹேஷ்டேகை பிரபலப்படுத்தி வருகின்றனர். அதில் பலர் அமித்ஷா மதவாத கருத்துகளை தொடர்ந்து பேசி வருவதாகவும், ஆனால் இதை அவரது கட்சியனரோ அல்லது பிரதமர் மோடியோ கேட்பதில்லை என்றும் கூறியுள்ளனர்.
Amit shah starts his speech with "Mamata is doing Hindu-Muslim, creating Divide" and
ends his speech with "All will be given Citizenship except Muslms"