பாகிஸ்தானுக்கு அழைக்கப்படாத மோடி! விருந்தினராக சென்ற மன்மோகன் சிங்!

திங்கள், 30 செப்டம்பர் 2019 (18:57 IST)
பாகிஸ்தானில் நடைபெற்ற ஒரு விழாவுக்கு மோடி அழைக்கப்படாத நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மட்டும் விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகின்றன. மோடி பிரதமராக பதவியேற்றது முதலே பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு ஆதரவு தர கூடாது என்று கூறி வந்தார். இதற்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேச்சு வார்த்தைக்கு அழைத்தாலும் கூட அவர் சென்றதில்லை. மேலும் புல்வாமா தாக்குதல், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து போன்றவற்றால் பாகிஸ்தான் – இந்தியா இடையேயான சமரசமின்மை அதிகரித்துள்ளது. இம்ரான்கான் போகும் நாடுகளில் எல்லாம் மோடியை விமர்சித்து பேசி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் பாகிஸ்தானில் கர்தார்பூர் சாலை துவக்கவிழா நடைபெற்றது. இந்த விழாவில் பாகிஸ்தானின் நட்பு நாடுகளான சீனா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆனால் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவரும் அந்த விழாவில் கலந்து கொண்டுள்ளார்.

இந்த செய்தியை குறிப்பிட்டு பேசிய பாஜகவினர் சிலர் பாகிஸ்தான் தனது பழைய பாசத்தின் பேரில் அவரை அழைத்திருப்பதாக கிண்டல் செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்