88வது திருமணம் செய்த 61 வயது நபர்: மணமகள் முன்னாள் மனைவி!

Webdunia
புதன், 2 நவம்பர் 2022 (19:11 IST)
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 61 வயது நபர் ஒருவர் ஏற்கனவே 87  திருமணம் செய்துள்ள நிலையில் தற்போது 88வது திருமணம் செய்துள்ளதாகவும் அவரை திருமணம் செய்து கொண்ட மணமகள் ஏற்கனவே அவரை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றவர் என்றும் கூறப்படுகிறது. 
 
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 61 வயது காதல் மன்னன் கான் இதுவரை 87 திருமணங்கள் செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் தன்னை விட்டுப் பிரிந்து சென்ற மனைவி மீண்டும் திரும்பிய போது அவரை ஏற்றுக் கொள்ள அவர் முடிவு செய்தார் 
 
இதனை அடுத்து 88வது முறையாக அந்த பெண்ணை அவர் திருமணம் செய்துகொண்டார். ஏற்கனவே இருவரும் திருமணம் செய்து ஒரு மாதம் மட்டுமே வாழ்ந்ததாகவும் தற்போது மீண்டும் இணைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது
 
14வது வயதில் முதல் திருமணம் செய்த 61 வயது கான், இதுவரை 87 திருமணம் செய்துள்ளதாக தெரிகிறது. இருப்பினும் அவருக்கு எத்தனை குழந்தைகள்? எத்தனை மனைவிகள் உயிரோடு இருக்கின்றனர்?  என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்