இன்றைய தீர்ப்பை வரவேற்கிறேன்.. பிரபல பெண் தலைவர்....

Webdunia
வியாழன், 27 செப்டம்பர் 2018 (19:47 IST)
தவறான  உறவில் ஈடுபடும் கணவருக்கு எதிராக கட்டிய மனைவி  இனி  சட்டத்திடம் செல்லவும், இழப்பீடு கேட்கவும்  குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் பெண்களால் இயலும்.  இம்மாதிரி தவறான உறவில் ஈடுபடுவோருக்கு எதிராக விவகாரத்து கோரவும் இனி சுலபமாக  முடியும் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தகாத உறவில்  ஈடுபடும் மனைவிக்கு எதிராக கணவர் புகார் கொடுத்தால் அவனது மனைவியுடன் பழகிய ஆணுக்கு மட்டுமே தண்டனை கொடுக்க முடியும். கணவன் தகாத உறவில்  ஈடுபட்டால் மனைவியால் புகார் கொடுக்க முடியாதநிலை இங்கு உள்ளது.  அது ஆண்- பெண் சமத்துவத்திற்கு எதிரானதாக இருக்கும் ஐபிசி 497 ஆவது பிரிவை நீக்க வேண்டும் என்று இந்த வழக்கில் தலைமை  நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமியினான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.  
 
இந்த நிலையில், பெண்களை ஆண்களின் ஆவணம் என கூறும் விதமான சட்ட பிரிவை தவிடுபொடியாக்கிய  சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்கிறேன் என மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் கூறியுள்ளார்.
 
அதே சமயம் , தவறான  உறவில் ஈடுபடும் கணவருக்கு எதிராக கட்டிய மனைவி  இனி சட்டத்திடம் செல்லவும், இழப்பீடு கேட்கவும்  குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் பெண்களால் இயலும்.  இம்மாதிரி தவறான உறவில் ஈடுபடுவோருக்கு எதிராக விவகாரத்து கோரவும் இனி சுலபமாக  முடியும் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்