ஹீரோ அபிநந்தனின் பெற்றோருக்கு தடபுடல் வரவேற்பு.! - வீடியோ!

Webdunia
வெள்ளி, 1 மார்ச் 2019 (11:53 IST)
வீரமகன் மகன் அபிநந்தனை வரவேற்க சென்னையில் இருந்து டெல்லி சென்ற அவரின் பெற்றோருக்கு மிகப்பெரிய அளவில் மரியாதையும், வரவேற்பும் அளிக்கப்பட்டுள்ளது.


 
இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்துக்கொண்டிருந்த நேரத்தில் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு பாகிஸ்தான் ராவல்பிண்டியில் இருந்து   இரண்டு நாள் கழித்து  இன்று விமானம் மூலம் லாகூருக்கு அழைத்து வரப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளார். 
 
இஸ்லாமாபாத்தில் இருந்து லாகூருக்கு அழைத்து செல்லப்படும் விமானி அபிநந்தன், அங்கிருந்து விமானம் மூலம் விமானி அல்லது டெல்லி அழைத்து வரப்படலாம் என கூறப்படுகிறது. அதே சமயம் வாகா எல்லையிலும் அபிநந்தனை பாகிஸ்தான் அரசு ஒப்படைக்க வாய்ப்புள்ளதாக, தெரிகிறது. 
 
இந்நிலையில் இந்தியா திரும்பும் தமது வீரமகன் அபிநந்தனை பார்ப்பதற்காக, அவரது தந்தை வர்த்தமான், தாய் சோபா, உறவினர்கள் பிரசாத், உஷா, அசோக் பானுகுமார் ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றனர். அங்கே அவர்களுக்கு மாலை மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதோடு அவர்கள் விமானத்தில் ஏறிய போது மிகப்பெரிய அளவில் மக்கள் அவர்களுக்கு வரவேற்பு அளித்தனர். ஹீரோவை நாட்டிற்கு கொடுத்த பெற்றோர் என்று எல்லோரும் கைதட்டி வரவேற்பு அளித்தனர்.


 
அபிநந்தனின் வருகைக்காகதான் எல்லோரும் டெல்லியில் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அபிநந்தன் டெல்லி வருவதற்கு இன்று மாலை ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. அபிநந்தனை வரவேற்க டெல்லியில் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவார்கள் என்பதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்