பெண் குழந்தையே வேண்டாம் என கதறும் தாய்: 7 பேரால் நாசம் செய்யப்பட்டு மகள் கொலை!

Webdunia
செவ்வாய், 16 மே 2017 (13:37 IST)
ஹரியானா மாநிலத்தில் வேலைக்கு சென்ற பெண்ணை 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று கடத்தி பலாத்காரம் செய்து அவரது முகத்தை சிதைத்து கார் ஏற்றி கொன்ற சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.


 
 
நாட்டு மக்களிடம் நிர்பயா சம்பவம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் மீண்டும் அதனை மிஞ்சும் அளவில் ஒரு சம்பவம் ஹரியானா மாநிலத்தில் நடந்துள்ளது. கடந்த 9-ஆம் தேதி 23 வயதான இளம்பெண் ஒருவர் வேலைக்கு சென்றுள்ளார்.
 
வேலைக்கு சென்ற அந்த இளம்பெண்ணை 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று கடத்தில் கொடூரமாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதன் பின்னர் அந்த பெண்ணின் உடலை சிதைத்து கார் ஏற்றி கொடூரமாக கொலை செய்து வக்கிரத்தை அரங்கேற்றியுள்ளனர்.
 
இளம் பெண்ணின் பெற்றோர் மகளைக் காணவில்லை என்று காவல்துறையில் அளித்த புகாரின்பேரில் மே 11-ஆம் தேதி அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இது தொடர்பாக இருவரைக் கைது செய்துள்ளதாகவும், ஏழு பேர் கொண்ட கும்பல் அப்பெண்ணைக் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் தாய் அளித்த பேட்டியில், யாருடைய மகளுக்கு வேண்டுமானாலும் இதுபோன்ற சம்பவம் நிகழலாம். பெண் குழந்தைகளின் பிறப்பை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்கிறது. ஆனால் வக்கிரக்காரர்கள் பெண்களை பலாத்காரம் செய்து கொன்று வருகின்றனர்.
 
இன்று எனக்கு நடந்த சம்பவத்தை தவிர்க்க, யாரும் பெண் குழந்தையைப் பெற்றுக் கொள்ளாதீர்கள். வெளியே சென்ற பெண் குழந்தைகள் பாதுகாப்பாக வீடு திரும்பும் வரை தாய்மார்கள் தவிக்கின்றனர். எனது மகளை பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளிகளை என்னிடம் கொண்டு வாருங்கள் நான் அவர்களை என் கையால் கொல்ல வேண்டும் என அந்த தாய் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்