மெடிக்கல் மிராக்கிள்: 38 நாட்கள் வெண்டிலேட்டரில், 40வது நாள் டிஸ்சார்ஜ்

ஞாயிறு, 10 மே 2020 (07:58 IST)
38 நாட்கள் வெண்டிலேட்டரில், 40வது நாள் டிஸ்சார்ஜ்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு 38 நாட்கள் வெண்டிலேட்டரில் வைத்து கண்காணிக்கப்பட்டு வந்த நோயாளி ஒருவர் திடீரென நாற்பதாவது நாள் கொரோனா நோய் முற்றிலும் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்படும் நிலைமைக்கு வந்துள்ளது பெரும் அதிசயத்தை ஏற்படுத்தியது. இதனை மெடிக்கல் மிராக்கிள் என மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர் 
 
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த 52 வயது நபர் ஒருவர் கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு அம்மாநில அரசு மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய உடல்நிலை சீரியசாக இருந்ததால் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். மேலும் அவர் கடந்த 38 நாட்களாக வென்டிலேட்டரில் வைத்து கண்காணிக்கப்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
 
அவரது உடல் நாளுக்கு நாள் மோசமாகி வந்த நிலையில் திடீரென 39வது நாள் அவரது உடல்நிலை தானாகவே தேற ஆரம்பித்தது. அதன் பின்னர் 40வது நாள் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது நெகட்டிவ் ரிசல்ட் வந்ததாகவும் இதனை அடுத்து அவர்  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
 
38 நாட்கள் வெண்டிலேட்டரில் இருந்த ஒரு கொரோனா நோயாளி திடீரென 40வது நாள் டிஸ்சார்ஜ் செய்யும் அளவுக்கு முன்னேறி இருப்பது பெரும் மருத்துவ உலகை பெரும் ஆச்சரியத்தை அளித்து விட்டதாகவும் இது உண்மையிலேயே மெடிக்கல் மிராக்கிள் என்றும் அந்நோயாளிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறி வருகின்றனர். இந்த சம்பவத்தால் மேற்குவங்க மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்